Connect with us

Health

63வயதில் குழந்தை பெற்ற பெண்!

Published

on

மதுரை:63வயதுள்ள பெண் செயற்கை கருத்தரிப்பு மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தை சேர்ந்த தம்பதி கிருஷ்ணன்(71)-செந்தமிழ்ச்செல்வி(63).திருமணமாகி 42ஆண்டுகள் ஆனபின்னும் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
மதுரையில் உள்ள பழனி பாலாஜி செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்றனர்.
அவர்களுக்கு டாக்டர் செந்தாமரை செல்வி சிகிச்சை அளித்தார்.
தற்போது செந்தமிழ்ச்செல்வி பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். குழந்தை 3.5கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது.இதுகுறித்து டாக்டர் செந்தாமரைச்செல்வி கூறுகையில்,
குழந்தையின்மை என்பது நோய் அல்ல. அது ஒரு தடை தான்.
அதை சரிசெய்யும் போது குழந்தை பேறு அடையலாம்.
உலகளவில் தற்போது ஆண்களுக்குத்தான் குறைபாடு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

21 வயது முதல் 31 வயது தான் குழந்தை பேறு சரியான காலம் ஆகும்.
35 வயதிற்கு மேல் குழந்தைபேறு என்பது மிகவும் கஷ்டம் தான்.
32 வயதிற்கு மேல் கருமுட்டை உற்பத்தியாகும் திறன் குறையும் என்றார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator