துப்பாக்கிச்சூடு குறித்து விளக்கம்! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!

மதுரை: நெல்லையை சேர்ந்த மகள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தங்கபாண்டி துப்பாக்கிச்சூடு தொடர்பான பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்டது யார் என்று அரசு தெரிவிக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்களை நோட்டீஸ் எதுவும் தராமல் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர்.அவர்கள் மிரட்டப்படுகின்றனர். அவர்களுக்கு வீண் தொந்தரவு தரப்படுகிறது அதனை நிறுத்த உத்தரவிட வேண்டுமென கூறப்பட்டிருந்தது.நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு மனுவை விசாரித்தது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசாரணை என்ற பெயரில் போலீசார் தொந்தரவு தரக்கூடாது என உத்தரவிட்டனர்.தூத்துக்குடி கந்தகுமார் என்பவரது மனுவை விசாரித்த இதே அமர்வு, ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? சுடுவதற்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணையை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here