சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியவருக்கு 10ஆண்டு சிறை!

சவுதி அரேபியா: அகமது மன்சூர் ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்.அரபு நாட்டின் அரசையும் அரசியல் தலைவர்களையும் தவறான, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பியதாகக் குற்றம்சாட்டி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த அபுதாபி நீதிமன்றம், மன்சூர் தனது தவறான பதிவுகளின் மூலம் ஐக்கிய அரபு நாட்டையும் அதன் கவுரவத்தையும் அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி அவருக்குத் தண்டனை வழங்கியது.
அகமது மன்சூருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் இந்திய மதிப்பில் ரூ.1.83 கோடி அபராதமும் விதித்து அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here