பில் கலெக்டரிடம் ரூ.50 கோடி பறிமுதல்!

ஐதராபாத்: ஐதராபாத் குண்டூர் நகராட்சியில் பில் கலெக்டராக வேலை பார்த்து வருபவர் முத்ரபோயினா மாதவ். இவரது தந்தை பணியில் இருந்தபோது உயிரிழந்ததையடுத்து முத்ரபோயினா மாதவ்க்கு வாரிசு அடிப்படையில் அரசு பணி கிடைத்தது.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாதவ் மீது புகார்கள் எழுந்தது. குண்டூரில் மாதவிற்கு சம்பந்தப்பட்ட 7 இடங்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 2 இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.சோதனையின் போது நிலம், பிளாட் தொடர்பான முக்கிய ஆவணங்கள், நகைகள், ரூ.50 கோடி மதிப்பிலான பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.மாதவிற்கு சொந்தமாக 4 வீடுகள், 20 பிளாட்கள், இருக்கிறது. முத்ரபோயினா மாதவை ஐதராபாத் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here