வருத்தம் தெரிவித்தார் ரஜினிகாந்த்!

தூத்துக்குடி: மே 30ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.சென்னை திரும்பியவர் விமானநிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு ஏய் என அதட்டும் விதமாக பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
இதற்கு சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. ரஜினிகாந்த் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது.நேற்று ரஜினிகாந்த் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின்போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை. அப்படி எந்தப் பத்திரிகை அன்பர்களின் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here