சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து சாமானிய மக்களை விழிபிதுங்கச்செய்து வரும்நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது.மானியமில்லாமல் சந்தையில் வாங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு விலை 48 ரூபாயும், மானியத்துடன் பெறும் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.34 காசுகளும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.டெல்லியில் மானியமில்லாத 14.2கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.698.50க்கும், மானியத்துடன் பெறும் கேஸ் சிலிண்டர் விலை ரூ.493.55க்கும் வழங்கப்படும்.சென்னையில் ரூ.481.84-க்கு மானியத்துடன்பெறும் சிலிண்டர்விற்பனை செய்யப்படும். மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் சென்னையில் ரூ.712.50-க்கும் விற்பனையாகும். இந்த விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here