அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கீடு! ஒருவர் குடுமி அடுத்தவர் கையில்….!

பெங்களூர்: காங்கிரஸ், மஜத கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை கர்நாடகாவில் அமைத்துள்ளன.
மஜத தலைவர் குமாரசாமி முதல்வராகவும், துணை முதல்வராக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரும் பொறுப்பேற்றுள்ளனர்.அமைச்சரவை ஒதுக்கீடுகள் தொடர்பாக இரு கட்சிகளும் பேசிவந்தன.
சோனியா, ராகுல் வெளிநாடு சென்றதால் ஒப்புதல் பெற தாமதமானது.
22அமைச்சர்கள் காங்கிரசிலும், 12அமைச்சர்கள் மஜதவிலும் இடம்பெறுவர்.
எந்த கட்சிக்கு எந்த பொறுப்பு என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு போலீஸ்துறை, நீர்ப்பாசனம், பெங்களூர் மேம்பாடு, தொழுல்துறை, சர்க்கரைத்தொழில், சுகாதாரம், வருவாய், நகர்ப்புற மேம்பாடு, கிராமப்புற மேம்பாடு, விவசாயம், வீட்டுவசதி, மருத்துவக்கல்வி, சமூகநலம், வனத்துறை, தொழிலாளர்நலத்துறை, சுரங்கத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், உணவுமற்றும் சிவில் சப்ளை, ஹஜ் மற்றும் வக்ப் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சட்டத்துறை, அறிவியல் தொழில்நுட்பம், இளைஞர், விளையாட்டுநலன், துறைமுகம், உள்நாட்டு போக்குவரத்து ஆகிய 22துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று மஜதவுக்கு உளவுத்துறை, திட்டம் மற்றும் புள்ளியியல், நிதித்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரம், கூட்டுறவு, சுற்றுலா, கால்நடைபராமரிப்பு, மீன்வளம்., சிறுதொழில், போக்குவரத்து, சிறு பாசனத்திட்டங்கள், தோட்டக்கலை மற்றும் பட்டுவளர்ப்பு ஆகிய 12துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.விவசாயிகள் கட்சியென பெயரெடுத்த மஜதவுக்கு விவசாயத்துறை கிடைக்கவில்லை. சிறு பாசனம், தோட்டக்கலை, மீன்வளம், கால்நடைபராமரிப்பு என கிடைத்துள்ளது.
கல்வித்துறை கிடைத்தாலும் மருத்துவக்கல்வி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பணம் கொழிக்கும் பொதுப்பணித்துறை, மின்சாரத்துறையுடன் நிதி, சுற்றுலா, போக்குவரத்து துறைகளை போராடி பெற்றதாம் மஜத.

காவல்துறை கிடைத்தாலும் உளவுத்துறையை தாரைவார்த்துள்ளது காங்கிரஸ். நிதி, மின்சார துறைகளை இழந்ததில் காங்கிரசுக்கு வருத்தம். இருந்தாலும் வனத்துறை, சுரங்கத்துறையை தங்களிடம் வைத்திருப்பது பாதுகாப்புக்காக என்று நினைக்கிறது.அறிவியல் தொழில்நுட்ப துறையை வைத்திருந்தாலும் கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்பத்தை மஜத கவனிக்குமாம்.
இருகட்சிகளையும் ஒருங்கிணைத்து ஆட்சிக்கு வழிகாட்டும் குழு தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here