இப்தார் நிகழ்ச்சிக்கு மடாதிபதி அழைப்பு!

உடுப்பி: புகழ்பெற்ற உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய தயார் என்று தெரிவித்துள்ளார் பெஜாவர் மடாதிபதி விஸ்வேஷ தீர்த்தர் சுவாமிகள்.கிருஷ்ணர் கோவிலில் கடந்த ஆண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முதன்முறையாக நடந்தது.
பெஜாவர் மடாதிபதி பங்கேற்று இஸ்லாமியர்களுக்கு தானே பரிமாறி விருந்து படைத்தார்.
இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.இந்நிலையில் இந்த ஆண்டு இஸ்லாமியர்கள் விரும்பினால் கிருஷ்ணர் கோவிலில் இப்தார்விருந்து நடைபெறும் என தெரிவித்துள்ளார் விஸ்வேஷ  தீர்த்தர்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், கிருஷ்ணர் கோவில் பார்யாய மண்டபத்தில் இப்தார் நோன்பு நடந்ததால் எதிர்ப்பு ஏற்பட்டது. இம்முறை கோவிந்தா கல்யாண மண்டபத்தில் வைத்துக்கொள்ளலாம்.

 

அனைவரும் அனைத்து மதங்களையும் மதிக்கவும், அனுசரிக்கவும் வேண்டும்.
அம்பேத்காருக்கு நான் எதிரி என்று சித்தரிப்பது தவறு. அவரை மிகவும் நேசிக்கிறேன். நாட்டுக்கான அரசியல்சாசனத்தை தந்தவர் அவர்.
மதச்சார்பற்ற நாட்டில் அனைத்து மதங்களும் சமமாகவே பாவிக்கப்படவேண்டும்.
சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு என்பது கூடாது. அனைத்து சமயத்தினருக்கும் ஒதுக்கீடு வழங்கபடவேண்டும். அதில் ஏற்றத்தாழ்வுகள் கூடாது.மாநிலத்துக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை செய்யும் அமைப்பாக அனைத்து கட்சிகளும் விளங்கவேண்டும். ரிசார்ட் அரசியல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதனால் மக்களிடம் நன்மதிப்பு கெட்டுவிடும்.
இவ்வாறு விஸ்வேஷ தீர்த்தர் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here