ஓட்டலில் விட்டுச்சென்ற ரூ.25லட்சம்! போலீசில் ஒப்படைத்த சர்வருக்கு பாராட்டு!!

சென்னை: அண்ணாநகர் சரவணபவன் ஓட்டலில் சாப்பிடவந்தவர் ஒரு பையை விட்டுச்சென்றார்
அதில் ரூ.25லட்சம் ரொக்கப்பணம் இருந்தது.
அந்த ப்ளாஸ்டிக் பையை சர்வர் ரவி போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் ஓட்டலின் கண்காணிப்பு கேமராவை பரிசோதித்தனர்.
அதில், குறிப்பிட்ட இருக்கையில் ப்ளாஸ்டிக் பையுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த நபர், போனில் பேசியபடியே ஓட்டலை விட்டுச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.அண்ணாநகர் காவல் ஆய்வாளர் சரவணன், சர்வர் ரவியின் நேர்மையைப் பாராட்டி கைக்கடிகாரம் பரிசளித்தார்.
ரவிக்கு சூப்பர்வைசராக பதவி உயர்வை ஓட்டல் நிர்வாகம் அளித்துள்ளது. அண்ணாநகர் மக்கள் நலக்கழகத்தினர் மோதிரம் பரிசளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here