Connect with us

Tamilnadu

குரூப்1 தேர்வுகளுக்கான வயது உச்சவரம்பு உயர்வு!

Published

on

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.இதன்படி, குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுக்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., ஆகிய பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு 35-ல் இருந்து 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மற்ற பிரிவினருக்கு 30-ல் இருந்து32 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்.மேலும் 2,248 பள்ளிகளில் ரூ 48.96 கோடி செலவில், மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 பாடப்பிரிவுகள் புதிதாக ஏற்படுத்தப்படும் என சட்டசபை கூட்ட தொடரில் தெரிவித்துள்ளார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator