வாலிபர் முதுகில் குத்திய கிரில்கேட்! அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்! தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு!!

சென்னை: நுங்கம்பாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் வெற்றிவேல். சம்பவத்தன்று வீட்டின் பூட்டப்பட்டிருந்த கிரில் கேட்டை ஏறி குதித்து தாண்டினார். கால் தடுமாறி கிரில் கேட்டின் மீது விழுந்தார்.கிரில் கதவின் கூர்மையான பகுதி அவரின் முதுகு பகுதியில் குத்தி ரத்தம் சொட்டியது. அருகிலிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் இரும்பு கதவின் ஒரு பகுதியை
அறுத்து எடுத்தனர். முதுகில் குத்திய மீதி பகுதியுடன் அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.மருத்துவர்கள் கூர்மையான கம்பி வெற்றிவேலின் நுரையீரலை குத்தியிருப்பது கண்டுபிடித்தனர். அறுவை சிகிச்சை மூலம் கம்பியை அகற்றி நுரையீரலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளித்தனர். மருத்துவர்கள் கூறும்போது வெற்றிவேல் உடலில்
குத்திய கம்பியை உடனே வெளியே எடுத்திருந்தால் ரத்தம் வீணாகி உயிர் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கும்.தீயணைப்பு படையினர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடலில் குத்திய கிரில் கேட்டின் ஒரு பகுதியை அருத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் அறுவை சிகிச்சை மூலம் அவரை காப்பாற்ற முடிந்தது. கூர்மையான ஆயுதம் உடலில் குத்தினால் அதை
வெளியே எடுக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு வருவதால் உயிரை காப்பாற்ற வாய்ப்பு அதிகமாக உள்ளது என தெரிவித்தனர். சிறப்பாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாரட்டையும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here