காவிரி ஆணையம் உருவானது! மத்திய அரசு கெசட்டில் அறிவிப்பு!!

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிதழிலில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்தார்.காவிரி பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16ல் உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பு கூறியது.
தீர்ப்பில் குறிப்பிட்டபடி செயல்திட்டம் அமைத்தது மத்திய அரசு.
அதில் மாநில அரசுகளின் கோரிக்கைப்படி திருத்தங்கள் செய்யப்பட்டன.
அதனை அரசிதழில் வெளியிட்டு உறுதிப்படுத்தவும் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.அதன்படி, நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி உத்தரவு பெற்று காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அரசிதழ் அறிவிப்பு இணையத்தில் வெளியாகி உள்ளது.காவிரி ஆணையம் ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இருப்பார் எனவும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here