யோகி ஆதித்யநாத்துக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு!!

லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இடைத்தேர்தல்களின் முடிவுகள், வியாழனன்று வெளியானது.அதில் உத்தரப்பிரதேசத்தில் கைரானா மக்களவைத் தொகுதி மற்றும் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், யோகி ஆதித்யநாத் அரசின் ஊழல்களினால்தான் பாஜக தோற்றதாக 2எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர்.

ஹர்தோய் மாவட்டத்தில் அமைந்துள்ள கோபமு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ ஷ்யாம் பிரகாஷ். பெரியா தொகுதி பாஜக எம்.எல்.ஏ.சுரேந்திராசிங் இருவரும் தேர்தலில் தோல்விக்கு கூறும் காரணங்கள்:
அரசின் நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் அதிருப்தியுடன் இருக்கின்றனர்.
அத்துடன் வேறு சில காரணங்களும் உள்ளன.
அரசு மீது எந்த தவறும் இல்லை. அதிகாரிகள்தான் தவறுக்கு காரணம்.
கடந்த அரசை விட இந்த அரசில் ஊழல்கள் அதிகமாக உள்ளது.
ஒட்டு மொத்த அரசும் ஊழலில் ஈடுபட்டுள்ளது.மக்களுக்கு எந்த விதமான நலத்திட்டங்களின் பலனும் கிடைப்பதில்லை.
மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தான் தேர்தல் பிரசாரம் செய்தார்.
முதல்வர் மீதான அதிருப்தி தேர்தலில் எதிரொலித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here