காதல் கணவர் கொலை! கள்ளக்காதலனுடன் பெண் கைது!!

நாகப்பட்டிணம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகமாடிய பெண் கைதானார்.
மயிலாடுதுறை பொன்செய் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(42).அதே கிராமத்தை சேர்ந்த ரேகா(35) என்பவரை 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அறிவழகன் வெளியூர் வேலைக்கு சென்றுள்ளார்.
ரேகாவின் வீட்டுக்கு பெயிண்டிங் வேலைக்கு வந்தார் ராஜசேகர்.இருவரும் நெருங்கிப்பழகினர். இதுதொடர்பாக அறிவழகனுக்கு தெரியவந்தது.
இதனால் ரேகாவும், ராஜசேகரும் சேர்ந்து அறிவழகன் தூங்கும்போது தலையணையால் அழுத்தி கொன்றனர்.அறிவழகன் கழுத்தில் ஏற்பட்ட தடத்தால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.
விசாரணையில் ரேகா உண்மையை ஒப்புக்கொண்டார். அவரும், ராஜசேகரும் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here