வளர்ப்பு அன்னையை தாக்கும் இளம்பெண்!

கொச்சி: சில மாதங்கள் முன் வடமாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் படுக்கையில் இருக்கும் பெண் ஒருவரை கடுமையாக தாக்கும் காட்சிகள் அடங்கிய விடியோ வெளியானது.அதேபோன்று கேரளத்தில் முதிய பெண்மணி ஒருவரை இளம்பெண் தாக்கும் விடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அம்முதிய பெண்மணி இளம்பெண்ணின் வளர்ப்பு அன்னை என்றும், அவரை பராமரிக்க இளம்பெண்ணின் குடும்பத்தினர் விரும்பாததால் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் தெரியவந்தது.சில மாதங்களுக்கு முன்னர் அப்பெண்மணி முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டதாகவும் அங்கு சூழ்நிலை பிடிக்காமல் அப்பெண்மணி பேரக்குழந்தைகளுடன் இருக்க விரும்பி வீடுதிரும்பியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here