மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்!

உத்திரப்பிரதேசம்: சாந்தி லக்னோவின் ஷியாம் நகரை சேர்ந்தவர். சனிக்வான் பகுதியை சேர்ந்த சுஜித் என்பவருக்கு சாந்தியை பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு ஒரு மாதம் கழிந்த நிலையில் தாய் வீட்டிற்கு சாந்தி சென்றார்.கணவர் வீட்டிற்கு திரும்பாத சாந்தியின் வீட்டிற்கு சென்று சுஜித் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார் சாந்தி.
காரணத்தை கேட்டார் கணவர் சுஜித். தனக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லையென்றும் பெற்றோர் கட்டாயப்படுத்தி மணமுடித்து விட்டனர் என்று கூறியுள்ளார். மேலும் ரவி என்பவரை காதலிப்பதகாவும் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் காவல் நிலையத்துக்கு சென்ற சுஜித் தனது மனைவியை காதலனுடன் சேர்த்து வைக்க போலீஸ் பாதுகாப்பு கேட்டார். சனிக்வானில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு மனைவி சாந்தியையும் காதலன் ரவியையும் வரவழைத்தார். உறவினர் முன்னிலையில் தனது மனைவியை ரவிக்கு திருமணம் செய்து வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here