பாலியல் குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை! சவுதி அரேபியா அரசு சட்டத்திருத்தம்!!

சவுதி அரேபியா: சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமதுபின்சல்மான் பெண்கள் பாதுகாப்பு, சுதந்திரத்தில் தீவிரகவனம் செலுத்திவருகிறார்.பெண்கள் விளையாட்டு மைதானத்துக்கு வரலாம். கார் ஓட்டலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் குடும்பத்தினருடன் திரையரங்கு செல்லவும் அனுமதிக்கபட்டுள்ளனர்.இந்நிலையில் பாலியல் துன்புறுத்தல் செய்வோருக்கு முன்னர் கசையடி தரப்பட்டது.
தற்போது அக்குற்றம் செய்வோருக்கு 5ஆண்டு சிறை, 3லட்சம் ரியால் அபராதம் விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.இச்சட்டத்திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சவுதி அரசர் அனுமதிபெற்ற பின் இப்புதிய சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here