50ஆண்டுக்குப்பின் ராஜராஜ சோழன் சிலை மீட்பு!

சென்னை: ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சை பெரியகோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட ராஜராஜன், லோகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டு சென்னை வந்தன.
தஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இக்கோவில் காப்பகத்தில் 13 பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.அதில், ராஜராஜ சோழன் சிலை (உயரம் 75 செ.மீ.) மற்றும் அவரது பட்டத்து இளவரசி ராணி லோகமாதேவி சிலை (உயரம் 55 செ.மீ.) ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
இச்சிலைகளின் மதிப்பு ரூ.100கோடி எனவும் அவை தனியாருக்கு விற்கப்பட்டதாகவும் தெரியவந்தது.இந்நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் கவனத்துக்கு இச்சிலைகள் குறித்த விபரம் தெரியவந்தது.
குஜராத் தனியார் மியூசியத்தில் இருந்த அச்சிலைகள் மீட்டு இன்று சென்னை கொண்டு வரப்பட்டன.
சென்னையில் இச்சிலைகளுக்கு ரயில் நிலையத்தில் மக்கள் உற்சாகவரவேற்பு கொடுத்தனர்.அமைச்சர் பாண்டியராஜன் சிலைகளை வரவேற்றார். ஐஜி பொன்மானிக்க வேலை அமைச்சர் பாராட்டினார்.
விரைவில் தஞ்சை கோவிலுக்கு கொண்டுசெல்லப்படும் சிலைகள் அங்கு பாதுகாப்பாக நிறுவப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here