அமைச்சர்களுக்கு திடீர் கெடு!

காத்மண்ட் :நேபாளத்தில் அமைச்சர் பதவியில் இருப்பவர்களுக்கு புதிய கெடு விதிக்கப்பட்டுள்ளது.
6 மாத காலத்திற்குள் லேப்டாப் இயக்க கற்றுக் கொள்ளாத அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பிரதமர் சர்மா ஒலி எச்சரித்துள்ளார்.

இரண்டாவது முறையாக நேபாள பிரதமராக பதவியேற்றுள்ள அவர், அலுவலகத்தை முற்றிலும் கணினிமயமாக்க முடிவு செய்துள்ளார்.
தேசிய ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய சர்மா ஒலி, அரசுப்பணிகளை விரைவாக செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.பிரதமர், அமைச்சக பணிகள் முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாகின்றன.
இதுதொடர்பாக ஏற்கனவே அமைச்சர்களுடன் பேசி முடிவு செய்து விட்டேன்.
6 மாத காலத்திற்குள் லேப்டாப்களை இயக்க தெரியவில்லை என்றால் , எந்த அமைச்சராக இருந்தாலும் பிரியா விடை கொடுத்து அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இவ்வாறு நேபாள பிரதமர் சர்மாஒலி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here