பாதுகாப்பு துறையில் ஊழல்! மத்தியஅரசு மீது திடுக் புகார்!!

டெல்லி:விமான உதிரிபாகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மீது புகார் எழுந்துள்ளது.
இந்திய விமானப்படையில் பயன்படுத்தக்கூடிய நடுத்தர ரக ஏஎன்-32 வகை விமானங்களுக்கு உக்ரைனில் இருந்து உதிரிபாகங்கள் வாங்கப்பட்டன.

இதுதொடர்பாக உக்ரைன் அரசின் பெட்ஸ்டெக்னோ எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
2014ல் நடைபெற்ற இந்த ஒப்பந்தம் அவசரமாக செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டை சேர்ந்த இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் சப்ளை செய்வதை புறக்கணித்து உக்ரைனில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


இதனால் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு ரூ.17.55கோடி லஞ்சம் தரப்பட்டுள்ளது.
உக்ரைன் ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணையில் இதுதொடர்பான விபரங்கள் தெரியவந்துள்ளன.
இதுகுறித்து மத்திய அரசுக்கும் உக்ரைன் அரசு கடிதம் எழுதியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here