கத்தாரில் புகலிடம் கோரும் அமீரக இளவரசர்!

கத்தார்: வளைகுடா கூட்டமைப்பில் இருந்து கத்தார் விலக்கிவைக்கப்பட்டு ஓராண்டுகள் ஆகவுள்ளது. இந்நிலையில் தற்சார்புடைய நாடாக கத்தார் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. புஜாரியா சேர்ந்த இளவரசர் ஷேக் ரஷித்பின் ஹமத் அல் ஷர்கி லண்டனில் வசித்துவந்தார்.அவர் ஏப்ரல் மாதம் பார்க்லேன் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் 2மாதங்களுக்கு வாடகைவீடு அமர்த்தியிருந்தார். ஆனால் 34 நாட்கள் அவர் அங்குதங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை கத்தார் தூதரகத்தை சேர்ந்த உயரதிகாரிகள் சந்தித்துள்ளனர்.ஹூத்ரு விமானநிலையத்துக்கு அவர் கத்தார் தூதரக வாகனத்தில் வந்துள்ளார்.
தனதுசுற்றுலா விசாவில் அவர் கத்தார் சென்றுவந்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.கத்தாரை எதிர்ப்பதில் சவுதிஅரேபியா தீவிரமாக உள்ள நேரத்தில், அவர்கள் தரப்பில் இருந்து கத்தாருக்கு அரசியல்புகலிடம் வேண்டி இளவரசர் விண்ணப்பித்துள்ளார் என்ற செய்தி மத்தியகிழக்கு நாடுகளின் அரசியல்வட்டாரத்தில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here