சைக்கிளில் ஊர்சுற்றும் துபாய் இளவரசர்!!

லண்டன்: சுற்றுலா விசாவில் ஐரோப்பா சென்று அங்கு சைக்கிளில் ஊரை சுற்றி வருகிறார் துபாய் இளவரசர். துபாய் இளவரசர் ஷேக் ஹம்தன் பின் ரஷித் கோடைகாலத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அவர் ஒரு சுற்றுலா பிரியர்.வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் தங்கி அங்குள்ள அனைத்து விபரங்களையும்
சேகரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அதனை ஆவணப்படுத்தியும் வருகிறார்.
இந்த ஆண்டு கோடை விடுமுறைக்காக ஷேக் ஹம்தன் ஐரோப்பா சென்றுள்ளார்.வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஈஸ்டோனியாவில் தங்கியுள்ளார்.இங்கு 1500க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அவற்றில் அரசர்கள், வணிகர்கள் உருவாக்கிய நூறாண்டுகளுக்கும் மேலான கோட்டைகள், வணிக வளாகங்கள், கட்டிடங்கள் உள்ளன. அங்கு தங்கியுள்ள துபாய் இளவரசர் அவை குறித்த வரலாற்று சிறப்புகளை சேகரித்து வருகிறார்.ஓய்வு நேரத்தில் நண்பருடன் சைக்கிளில் ஊர்சுற்றி வருகிறார். இளவரசர் சைக்கிளில் செல்லும் காட்சியை அவருடன் சென்றுள்ள நண்பர் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here