நடனமாடியபடி அறுவை சிகிச்சை!

அமெரிக்கா: விண்டல் அமெரிக்காவில் ஜார்ஜியா பகுதியில் வசித்து வருபவர். தோல் மருத்துவர்.நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் விடியோவை நேற்று வெளியிட்டிருந்தார்.விண்டல் கையில் கத்தியுடன் தானே பாடிக்கொண்டு நடனமாடியும் மயக்க நிலையில் இருக்கும் நோயாளியின் கிழிக்கப்பட்ட வயிற்றுப் பகுதியை காண்பிக்கிறார்.இந்த விடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சிகிச்சை பெற்ற நோயாளி மூளைச் சாவு அடைந்ததாகவும், விண்டல் அறுவை சிகிச்சை செய்வதற்கு உரிமம் பெற்றவரில்லை எனவும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here