டென்ஷன் ஆகாதீங்க இளநரை வரும்!

சென்னை: இளம் வயதில் முடி நரைப்பது முதிர்ந்த தோற்றத்தை ஏற்படுத்தும். முடியின் நிறம் உடலில் உள்ள மெலனின் அளவுப்படிதான் அமையும். நம் தோலின் நிறமும் மெலனின் அளவுப்படிதான் அமையும். உடலில் மெலனின் உற்பத்தி குறையும் போது முடியின் நிறம் வெள்ளையாகும் அதை மாற்ற முடியாது நரைத்த முடியை கருப்பாக்குவதும் முடியாது.செயற்கையான முறைகளை கையாளண்டாலும் அவை நிரந்தரம் இல்லை. முடிக்கு நிறமளிக்கும் மெலானின் நிறமி சில நேரத்தில் செயல்படாமல் இருந்துவிடும். அல்லது நிறமி உற்பத்தி குறைய ஆரம்பிக்கும். அச்சமயத்தில்தான் முடி நரைக்க ஆரம்பிக்கும்.தலை முடியை வறட்சியாக வைப்பதும் முக்கிய காரணம், உடலில் மரபு ரீதியான மாற்றம், ரத்த சோகை நோய், அதிக மருந்துகள் உட்கொள்வது, போதிய அளவு தூக்கமின்மை, விட்டமின் பி மற்றும் விட்டமின் கே குறைபாடு, தைராய்டு பிரச்னை, அதிகமான டென்ஷன், பித்த அமிலம் அதிகமாக சுரப்பது போன்ற காரணங்களால் இளநரை சீக்கிரமாக வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இளநரை ஏற்பட்டால் முதலில் மருத்துவரை அணுகுவது நல்லது. இளநரை போக்க விட்டமின்-பி சத்துள்ள உணவை எடுத்துக் கொள்வது, இரும்புச் சத்து, புரோட்டீன் அதிகம் உள்ள உணவை சேர்ப்பது பலன் தரும்.தலைக்கு சிகைக்காய், அரப்பு, பாசிப்பயறு மாவு போன்ற இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இதை செய்தால் இளநரை மறையத் தொடங்கும். தினமும் உணவில் பீட்ரூட், நாவல்பழம், பீர்க்கங்காய், பாகற்காய், சுண்டைக்காய், நெல்லிக்காய், கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயப்பொடி, இஞ்சி, தேன், தயிர் ஆகியவற்றை ஒரு நாளைக்கு ஒன்றையாவது உணவில் சேர்த்தால் இளநரை வராது.மருதாணி ஊறப்போட்ட தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து தலைக்குத் தேர்த்து வருவது முடிக்கு நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here