இளம்பெண்ணிடம் ரூ.2லட்சம் பறித்துச்சென்ற குரங்கு!!

ஆக்ரா: இளம்பெண்ணிடம் ரூ.2லட்சத்தை பறித்துச்சென்றது குரங்கு. அதன் கையில் இருந்து ரூ.60ஆயிரம் மட்டுமே மீட்கப்பட்டது.
ஆக்ரா புதுமார்க்கெட் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது.அங்கு ரூ.2லட்சம் பணத்தை எடுத்து திரும்பினார் விஜய்பன்சால் என்ற வியாபாரி.
அவருடன் 14வயது மகள் நான்சியும் வந்திருந்தார்.
மகள் கையில் பணப்பையை கொடுத்துவிட்டு வங்கியில் விட்டுவந்த ஹெல்மெட்டை எடுக்க பன்சால் சென்றார்.

அப்போது ஒரு குரங்கு நான்சியின் கையில் இருந்த பணப்பையை பறித்துச்சென்றது.
அது பையை திறந்து நோட்டுக்களை விசிறியடித்தது.
அக்குரங்குக்கு உணவு, பழங்கள் கொடுத்து பையை மீட்க நடந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
பணப்பையுடன் குரங்கு ஓடிச்சென்றது. குரங்கு விசிறியடித்த பணத்தில் ரூ.60ஆயிரம் மட்டுமே கிடைத்தது.நான் அரும்பாடுபட்டு சேர்த்த பணத்தை குரங்கு பறித்துச்சென்றுவிட்டதே என்று விஜய்பன்சால் கண்கலங்கினார்.
போலீசிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here