மோடி அரசுக்கு எதற்கு வரி? கட்டபொம்மனான சந்திரபாபு நாயுடு!!

விஜயவாடா:மோடி அரசுக்கு வரி ஏன் கட்டவேண்டுமென வீரபாண்டிய கட்டபொம்மனாக கொதித்தெழுந்துள்ளார் ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு.
விஜயவாடாவில் தெலுங்குதேசம் கட்சியின் 3நாள் மாநாடு நடந்தது.இறுதிநாள் விழாவில் சந்திரபாபு நாயுடு பங்கேற்று பேசினார்.
சர்வாதிகார மனப்போக்குடன் மோடி அரசு மாநிலங்களை அணுகுகிறது.
மாநிலங்களின் நிதிச்சுழலை மத்திய அரசு மிகவும் பலவீனப்படுத்துகிறது.
மோடி அரசு தன்னிச்சையாக செயல்பட்டு மக்களுக்கு எதிரான முடிவுகளை எடுக்கிறது.
மத்திய அரசின் விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை அடக்குகிறது.

தெலங்கானா ஹைதராபாத்தில் இருந்து பெரும்பாலான வருவாயைப் பெறுகிறது.
கர்நாடகா பெங்களூரில் இருந்தும், தமிழகம் சென்னையில் இருந்தும் பெறுகிறது.
ஆந்திராவுக்கு எனத் தனியாக தலைநகரம் ஏன் உருவாக்கிக்கொள்ளக் கூடாது.
குஜராத்தில் உள்ள தோலிரா நகரை மேம்படுத்த பாஜக ரூ.95ஆயிரம்கோடி செலவிடுகிறது.
ஆந்திராவில் ஏன் அமராவதியை உருவாக்க நாம் செலவிடக்கூடாது.மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு நாம் ஏன் வரி வசூலித்துக் கொடுக்க வேண்டும்
2019ல் ஆந்திராவில் அனைத்து மக்களவை தொகுதிகளையும் தெலுங்குதேசம் வெற்றிபெறும்.
தேசிய அளவில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம். இவ்வாறு சந்திரபாபுநாயுடு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here