Connect with us

Sports

ரூ.1.51கோடிக்கு மோனுவை வாங்கியது ஹரியானா கபடி அணி!

Published

on

மும்பை: ப்ரோ கபடி போடிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் நடைபெற்றது.
422வீரர்களுக்கான ஏலத்தில் 12 அணிகள் பங்கேற்றனர்.
422வீரர்களில் 58பேர் வெளிநாடுகளான ஈரான், ஜப்பான், இலங்கை, மலேசியா உள்ளிட்ட 14நாடுகளில் இருந்து பங்கேற்கின்றனர்.
9அணிகள் ஏற்கனவே 21வீரர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளன.4பிரிவுகளில் ஏலம் நடந்தது. ஏ பிரிவில் ஏலத்தின் அடிப்படை தொகை ரூ.20லட்சமாகவும், புதிய இளம்வீரர்களுக்கான அடிப்படை தொகை ரூ.6.6லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மோனு கோயத்தை 1.51 கோடி ரூபாய்க்கு ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு அதிகம் விலைக்குப்போன ராகுல் சவுதாரி தெலுகு டைடன் அணியில் இந்தாண்டு தொடர்கிறார். அவர் ரூ.1.29கோடிக்கு ஏலமெடுக்கப்பட்டார்.
இந்தாண்டு பல வீரர்கள் ஒரு கோடிக்கு மேல் ஏலம் போயுள்ளது குறிப்பிடத்தக்கது. வியாழன்றும் இரண்டாம் நாள் ஏலம் தொடர்ந்து நடைபெறுகிறது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator