ஐயா குளத்தை காணலங்க! சினிமா பாணியல் மோசடி!!

திருப்பூர்: திருப்பூர் தெக்கலூரில் கிராமசபை கூட்டம் நடந்தது. செட்டிகுளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு  திட்டத்தின் கீழ் ரூ 4 லட்சத்து 96 ஆயிரம் செலவில் குளம் வெட்டப்பட்டதாக அதிகாரிகள் அறிக்கை வாசித்தனர்.வெட்டாத குளம் பற்றி அதிகாரிகள் அறிக்கை படித்ததில் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குளம் வெட்டியதாக அரசு பணம் முறைகேடு செய்யப்பட்டது குறித்து கிராம மக்கள் எங்கள் கிராமத்தில் இருந்த குளத்தை காணவில்லை
அதனை கண்டுபிடித்து தரும்படி கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.மேலும் குளம் குறித்து விசாரணை நடத்த சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து வெட்டப்பட்ட குளத்தை காட்டச் சொல்லி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் போலி ஆவணம் தயாரித்து அரசுப் பணத்தை கையாடல் செய்த பஞ்சாயத்து தலைவர், குளத்தை ஆய்வு செய்ததாக சான்று வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.இது தொடர்பாக ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனருக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உததரவிட்டுள்ளார். வடிவேலு பட பாணியில் கிராமக்கள் குளத்தை காணவில்லை என புகார் மனு அளித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here