க்ரிப்டோ கரன்சியில் நிதி வசூலிக்கும் மசூதி!

லண்டன்:உலகில் முதன்முறையாக க்ரிப்டோ கரன்சி வடிவத்தில் நிதிவசூலிக்கிறது மசூதி நிர்வாகம் ஒன்று.
ரம்ஜான் பண்டிகைக்காக நிதி தருவோர் பிட்காயினாகவும் தரலாம் என்று மசூதி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கிழக்கு லண்டனில் உள்ளது ஷேகல்வெல் லேன் மசூதி. இங்கு ரம்ஜான் மாதத்தில் தினமும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.
மசூதி நிர்வாகம் சார்பில் தினமும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்படும்.
இதற்காக நிதி பெறுவது வழக்கம். அந்நிதிக்கான பராமரிப்பு செலவு ஆண்ட்தோறும் அதிகரித்து வருகிறது.
இதனால், இந்த ஆண்டு பிட்காயினாக நிதி பெறலாமென முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதற்காக ப்ளாக்செயின் தொழில்நுட்பம் அடிப்படையிலான கணக்கு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.
க்ரிப்டோ கரன்சிகளை சேமித்து வைத்திருப்பவர்கள் தங்கள் கரன்சிகளிலேயே மசூதிக்கு நிதி அளிக்கலாம்.

பிட்காயின், யோகாயின், எதுரியம் போன்ற எந்த வகை காயினிலும் அன்பளிப்புதரலாம். அதனை உடனடியாக பணமாக மாற்றிக்கொள்கிறது மசூதிநிர்வாகம்.
கடந்த ஆண்டுகளை விடவும் இந்தாண்டு இதுவரை 13ஆயிரத்து300டாலர் அதிகமாக நிதிபெற்றுள்ளதாக மசூதி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here