ஸ்டைலாக முடி வெட்டியதால் தந்தை கண்டிப்பு! பள்ளி மாணவன் தற்கொலை!!

திருப்பூர்: திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த தையல் தொழிலாளியின் மகன்,  சலூனுக்கு சென்று தனக்கு பிடித்தவாறு முடிவெட்டி உள்ளார்.இதைப்பார்த்து, கோபமடைந்த அவனது தந்தை, பள்ளி திறக்க உள்ள நிலையில்
இதுபோன்று முடிவெட்டக் கூடாது என்று கண்டித்ததுடன், மீண்டும் சலூனுக்கு கூட்டிச்சென்று மகனின் தலைமுடியை ஒழுங்காக வெட்டியுள்ளார்.இதனால், விரக்தியில் இருந்த அந்த மாணவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.வேலம்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவனின் தற்கொலை குறித்து இந்த விவரம் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here