அரசு பெயரில் போலி இணையதளம்! வேலை தருவதாக மோசடி!!

ஹைதராபாத்: தெலுங்கானா அப்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் என்ற பெயரில் போலி அரசு இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி வேலை வழங்கும் உத்தரவை அளித்துள்ளனர்.விண்ணப்பிக்க கட்டணம் ரூ. 98 தெரிவிக்கப்பட்டிருந்தது. கட்டணம் கட்டியவர்களுக்கு ஐ டெக் நிறுவனத்திலிருந்து அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்நிறுவனத்தில் விண்ணப்பிக்க விண்ணப்ப படிவம் தொகையாக ரூ. 499 செலுத்தமாறு கேட்டுள்ளனர்.இளைஞர்கள் பலர் வேலை கிடைக்கும் ஆர்வத்தில் தொகையை கட்டியுள்ளனர். இவ்வாறு 20 ஆயிரம் இளைஞர்களை ஏமாற்றி ஆன்லைன் வழியாக பணம் பெற்றுள்ளனர்.இதன் மூலம் ரூ.20 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர். இந்நிலையில் வேலை கிடைக்காதவர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் டெல்லியை தலைமை இடமாக கொண்டு இயங்கிய விகாஸ் குமார், ஆனந்த்பரவாட் மற்றும் விகாஸ் கந்தெல்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அலுவலகத்திலிருந்த
ரூ. 2,50,000 பணம் மற்றும் இரண்டு கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here