எடப்பாடியின் ‘3சி’ அரசு! ஸ்டாலின் கடும் தாக்கு!!

சென்னை: தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ’3சி’ அரசு நடத்திவருகிறார் என்று தெரிவித்தார் ஸ்டாலின். திமுக தலைமை அலுவலகத்தில் மாதிரி சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டியவர் ஜெயலலிதா தான். மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது அதிமுக அரசு தான் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லை என சான்றிதழ் கொடுத்ததும் அதிமுகதான்.அமைதி பேரணியையை கலவரமாக்கியது தமிழக அரசு. திமுகவுக்கு ஜனநாயக போராட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது துப்பாக்கிச்சூடுக்கு அனுமதி கொடுத்தது எடப்பாடி பழனிச்சாமிதான். 13 உயிர்கள் பறிபோக காரணமானவரும் எடப்பாடி
பழனிச்சாமிதான்.திமுக மீது வீண் பழி சுமத்துகிறது அதிமுக அரசு. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசின் நோக்கம் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான். இவ்வாறு ஸ்டாலின் மாதிரி சட்டசபையில் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here