இயர்போனில் பாட்டு! ரயில் மோதி 3 பேர் பலி!!

லக்னோ: இயர்போன் காதில் மாட்டிக்கொண்டு பாட்டுகேட்டபடி ரயில் டிராக்கில் சென்ற மூன்று இளைஞர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் உள்ள சுவாலெங்கார் ரெயில்வே கிராசிங் பகுதியில் ஷாகித் , டேனிஷ், ராஜேந்திரா ஆகிய மூன்று பேர் காதில் இயர்போனை மாட்டி பாட்டு கேட்டபடி ரெயில் டிராக்கில் நடந்து சென்றனர்.அவ்வழியாக விரைவு ரயில் வந்துள்ளது. அவர்களை ரயில் பாதையில் இருந்து விலகி செல்ல ஓட்டுனர் ஹாரன் அடித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.இளைஞர்கள் காதில் இயர்போன் மாட்டியிருந்ததால் ஹாரன் சத்தம் கேட்கவில்லை.
இதனால் அவர்கள் மூன்று பேர் மீது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here