திமுக போட்டி சட்டசபை கூட்டம்! ஸ்டாலினுக்கு முடிசூட்டிய கருணாஸ்!!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து முதல்வர் ராஜினாமா செய்யும்வரை பேரவையை புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளது திமுக.அக்கட்சி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டப்பேரவை கூட்டம் நடந்தது.காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்திட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாதிரி சட்டமன்ற கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது: தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாதிரி சட்டமன்ற கூட்டத்தில் தான் அதிக உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, இது தான் உண்மையான சட்டமன்றம். முதல்வர், சபாநாயகர் ஜனநாயக மாண்பு தெரியாதவர்களாக இருக்கிறார்கள். எதிர்கட்சிகள் இல்லாமல் சட்டமன்றம் நடத்துவது பேடித்தனம்.“துடப்பக் கட்டைக்கு நூல் கட்டுன மாதிரி தமிழ்நாட்டுக்கு ஒரு துணை முதலமைச்சர்” என துரைமுருகன் பேசினார். அக்கருத்து மாதிரி சட்டமன்றத்தின் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.எம்.எல்.ஏ.கருணாஸ் பேசுகையில், அதிமுக அரசை கவிழ்த்துவிட்டு திமுக செயல்தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும்.
ஸ்டாலின் தலைமையில் விரைவில் தமிழக சட்டசபை நடைபெறும்.ஜெயலலிதா பத்துநாட்கள் கழித்து அப்பல்லோவில் அட்மிட் ஆகியிருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன். மாதிரி சட்டமன்ற கூட்டத்தில், திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி சபாநாயகராக செயல்பட்டார். கே.ஆர்.ராமசாமி தலைமையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவரும், திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here