சாலையில் தேங்கியநீரில் தட்டுக்கள் சுத்தம்! பிரபல ஓட்டலுக்கு பூட்டு!!

கோலாலம்பூர்: மலேசியாவில் பிரபலமான ராஜ் பனானா லீப் உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பங்சார் பகுதியில் அமைதுள்ள அதன் கிளையில் ஊழியர்கள் தட்டுகளைச் சாலையில் தேங்கிக்கிடந்த தண்ணீரில் கழுவும் விடியோ சமூக ஊடகங்களில் வெளியானது.

உணவகத்தின் சுகாதாரத்தைச் சோதனையிட இன்று அதிகாரிகள் சென்றனர்.
அவர்கள் ஓட்டலில் நடந்த சுகாதாரக்கேட்டை உறுதிசெய்தனர்.
இதனைத்தொடர்ந்து ஓட்டலை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து ஓட்டல் மூடப்பட்டது. அதில் மறு உத்தரவு வரும்வரை ஓட்டல் திறக்கப்படக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிடையே, உணவு தயாரிப்பதில் முழுமையான சுகாதாரவிதிமுறைகளை பின்பற்றுகிறோம்.
புதிதாக வேலைக்கு சேர்ந்த தற்காலிக பணியாளர்கள் தவறு செய்துவிட்டனர்.
அதற்கு வருந்துகிறோம். இனிமேல் இதுபோன்ற தவறு ஒருபோதும் நிகழாது என்று ஓட்டல் நிர்வாகம் சமூக ஊடகங்கள்வாயிலாக விளக்கம் அளித்தது.வாடிக்கையாளர்களுக்கு உணவையும் இலவசமாக வழங்குவதாக அறிவித்தது.
இருந்தபோதும் அதிகாரிகள் உணவகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்தனர். உணவகம் மூடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here