தொடரும் பாலியல் வன்கொடுமை! பாஜக எம்எல்ஏ மீது புகார்!!

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மற்றொரு சம்பவமாக பாஜக எம்எல்ஏ மீது பாலியல் பலாத்கார புகார் தெரிவிக்கப்பட்டு போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.பதயூன் மாவட்டம் பிஸ்ஸாவுலி தொகுதி எம்எல்ஏ குஷாகரா சாகர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். வேலைகாரரின் மகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலத்காரம் செய்து உள்ளார்.திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் கூறியுள்ளார்.போலீசில் புகார் தெரிவித்ததால் கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த விஷயத்தை முடித்துகொள் ரூ. 20 லட்சம் தருவதாக பேரம் பேசியதாகவும் கூறியுள்ளார். எம்எல்ஏவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதால் அப்பெண் இப்புகாரை போலீசில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here