14 வயது கள்ளக்காதலன்! ஏழு வயது மகனை கொன்ற கொடூர தாய்!!

கொல்கத்தா: கொஸ்தோ மண்டல் கொல்கத்தாவை சேர்ந்தவர். இவர் மனைவி சகாரி (28). இவர்களுக்கு சதன் மண்டல் என்ற ஏழு வயது மகன் உள்ளான்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சதன் அங்குள்ள சாக்கடையில் சடலமாக கிடந்துள்ளான். சடலத்தை கைப்பற்றிய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். சதனின் தாய் சகாரி அவரை கொலை செய்ததது தெரியவந்துள்ளது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் சகாரியின் 14 வயதான உறவுக்கார சிறுவனுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. சகாரியும், அந்த சிறுவனும் தனிமையில் இருப்பதை சதன் பார்த்துள்ளான். அவன் இது குறித்து தந்தை கொஸ்தோவிடம் கூறுவேன் என தெரிவித்துள்ளான்.இதனால் ஆத்திரமடைந்த சகாரி அந்த சிறுவனுடன் சேர்ந்து சதனை கழுத்தை நெரித்து
கொலை செய்து சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி வீசியது தெரியவந்துள்ளது. இதையடுத்து சகாரி மற்றும் அவர் கள்ளக்காதலனான சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here