பார்வையற்ற பெண் கலெக்டர்! எர்ணாகுளத்தில் பொறுப்பேற்பு!!

எர்ணாகுளம்: கர்நாடகா மாநிலத்ஹை சேர்ந்த இன்ஜினியர் என்பி பாட்டீல். இவரது மனைவி ஜோதி. இத்தம்பதியின் மகள் பிராஞ்சலி பாட்டீல். 2வயதில் பார்வை இழந்தார்.பெற்றோர் பிராஞ்சலியை ஊக்கமுடன் வளர்த்தனர். கலெக்டர் ஆகவேண்டும் என்ற இலட்சியத்தை பிராஞ்சலி மனதில் விதைத்தனர். மும்பை கல்லூரியில் பட்டம், டெல்லியில் எம்பில் மற்றும் பிஎச்டி முடித்தார்.சமூகசேவையிலும் ஆர்வம்காட்டிவந்த இவர் ஓராண்டு கடுமையாக உழைத்து தொடுதிரை கம்ப்யூட்டர் உதவியுடன் ஐஏஎஸ் தேர்வுக்கு தயாரானார்.2014ல் முதன்முறையாக ஐஏஎஸ் தேர்வு எழுதினார். அதில் வெற்றிபெற்றாலும் ரயில்வே துறையில் பணிவாய்ப்பு கிடைத்தது. தனது லட்சியத்தை நோக்கி விடாப்பிடியாக நகர்ந்த அவர் 2017ல் மீண்டும் ஐஏஎஸ் தேர்வு எழுதி 124வது இடம் பிடித்தார். நேர்முகத்தேர்வில் வெற்றிபெற்று நேற்று முன் தினம் எர்ணாகுளத்தில் பயிற்சி கலெக்டராக பணிதுவக்கினார். பிராஞ்சலி விருப்பப்படி தாய் ஜோதி அவரை கலெக்டர் இருக்கையில் அமரவைத்தார். நாட்டில் இதுபோன்ற ஒருவர் கலெக்டராக பணிதுவக்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here