Connect with us

Tamilnadu

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! சிபிசிஐடிக்கு மாற்றம்!!

Published

on

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீதும், உத்தரவிட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.உச்சநீதி மன்றத்தில் துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என வழக்கு தொடர்பட்டது. தூத்துக்குடி தனித்துணை வட்டாட்சியர் சேகர், மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக
முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சிப்காட் மற்றும் வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்று காலை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator