ஜனாதிபதிக்கு அனுமதி மறுப்பு! வதந்தியால் பூசாரி மீது தாக்குதல்!!

ராஜஸ்தான்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை தரிசனத்துக்கு அனுமதிக்க மறுத்ததாக கோவில் நிர்வாகி தாக்கப்பட்டார்.
ஜனாதிபதி சமீபத்தில் ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தார். புஷ்கர் என்ற பகுதியில் உள்ள கோவிலுக்கு அவர் தரிசனம் செய்ய வந்தார்.ஆனால், அவரது மனைவிக்கு மூட்டுவலி காரணமாக படியேறி செல்வது கடினம் என்பதால், வாசலில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பிவிட்டார்.
ஆனால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கோவில் பூசாரி உள்ளே அனுமதிக்கவில்லை என அங்குள்ளவர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது.
இந்த வதந்தி காரணமாக அசோக் மேஹ்வால் என்பவர் அந்த கோவிலுக்கு சென்று பூசாரியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில், பூசாரிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து, தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here