ரூ.15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி கூறவில்லை! பாஜக எம்பி அந்தர் பல்டி!!

புனே: பாஜகவின் 4 ஆண்டு சாதனை குறித்து மகராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பாஜக எம்பி அமர் சாபல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.மக்களிள் வங்கிக்கணக்கில் 15 லட்ச ரூபாய் செலுத்தப்படும் என பிரதமர் மோடி
கூறியதாக எதிர்கட்சிகள் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் செலுத்தப்படும் என பிரதமர் மோடி ஒருபோதும் கூறியதில்லை என தெரிவித்தார்.எதிர் கட்சியினர் தவறான தகவலை அளித்து மக்களிடம் குழப்பத்தை எற்படுத்துகின்றனர். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அப்படியொரு தகவல் இடம்பெறவில்லை என்பதை கவனிக்கவேண்டும் என எம்பி அமர் சாபல் கூறியுள்ளார்.கடந்த 2014 தேர்தலின் போது நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்துவதாக பிரதமர் மோடி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here