ஆக்ராவில் அதிர்ச்சி சம்பவம்! அதிகாரிக்கு எச்சிலுடன் நீர்கொடுத்த உதவியாளர்!!

ஆக்ரா: கடுமையாக வேலைவாங்கிய நீதிபதிக்கு தண்ணீரில் எச்சில் உமிழ்ந்து கொடுத்துள்ளார் ஒரு உதவியாளர். கண்காணிப்பு கேமராவில் இதுதொடர்பான காட்சிகள் பதிவானதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.ஆக்ரா மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வருபவர் விகாஸ் குப்தா. நீதிமன்றத்தில் புதிதாக பணிக்கு சேர்ந்த பெண் நீதிபதி ஒருவருடம் விகாஸ் குப்தா உதவியாளராக நியமிக்கப்பட்டார். அவருக்கு 2மாதமாக கடுமையான வேலை இருந்தது.விடுமுறை கொடுக்கப்படாததால் சில்மிஷ வேலைகளை நடத்திவந்தார். இதுகுறித்து சந்தேகமடைந்த பெண் நீதிபதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்தார். அப்போது விகாஸ் குப்தாவின் அருவருக்கத்தக்க செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.இதுகுறித்த காட்சிகள் அடங்கிய சிடியுடன் செசன்ஸ் நீதிபதி பி.கே.சிங்கிடம் புகார் தரப்பட்டது. அவர் உடனடியாக விகாஸ் குப்தாவை சஸ்பெண்ட் செய்தார். இதுகுறித்து விசாரிக்க அதிகாரிகள் குழுவையும் நியமித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here