Connect with us

National

சிம் விற்பனை தொடங்கினார் பாபா ராம்தேவ்!

Published

on

ஹரித்வார்: யோகா குரு பாபா ராம்தேவ் நடத்திவரும் பதஞ்சலி நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் கால் பதித்துள்ளது. சுதேசி சம்ரிதி சிம் கார்டு என்ற பெயரில் சிம்கார்டுகள் விற்பனையை பதஞ்சலி தொடங்கியுள்ளது.இதற்காக பதஞ்சலி பிஎஸ்.என்.எல். நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
இந்த சிம்கார்டை பயன்படுத்துவோர் பதஞ்சலி நிறுவன பொருட்களில் 10சதவீதம் தள்ளுபடி பெறுவார்கள்.ரூ.144 ரிசார்ஜ் செய்தால் 2ஜிபி டேட்டா. 100எஸ்.எம்.எஸ்., அழைப்புகள் இலவசம்.
இதுதவிர சிம்கார்டு வாங்குவோர் சாலைவிபத்துகளை சந்திக்க நேர்ந்தால் விபத்து காப்பீடு ரூ.2.5லட்சம், ஆயுள்காப்பீடு ரூ.5லட்சம் ஆகியவையும் வழங்கப்படுகிறது.சிம்கார்டு விற்பனையை துவக்கிவைத்து பாபா பேசுகையில், இது சுதேசி நெட்வொர்க்.
அறப்பணிகளுக்காக வளம் சேர்ப்போம் என்ற எங்கள் கொள்கையுடன் இந்த சேவையில் இறங்கியுள்ளோம் என்றார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator