அமீரகத்தை மிரட்டும் மெர்ஸ் வைரஸ்!

அமீரகம்:ஐக்கிய அரபு அமீரகத்தில் மெர்ஸ் வைரஸ் நோய் தாக்குதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும் காணப்பட்ட மெர்ஸ் வைரஸ் 2012ல் அடையாளம் காணப்பட்டது.இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2,207பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
அரபுநாடுகள் மட்டுமின்றி மலேசியாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு காணப்பட்டுள்ளது.

நீண்டநாட்களுக்குப்பின் ஒட்டகப்பண்ணை அதிபர் ஒருவர் மெர்ஸ் வைரஸால் இம்மாதம் 2வது வாரம் இறந்துள்ளார்.
கடுமையான காய்ச்சல், மூச்சுத்திணறல், டென்ஷன் ஆகியவை இவ்வைரஸ் தாக்கியதற்கான அறிகுறிகள் ஆகும்.ஒட்டகத்தின் பாலை சுடவைக்காமல் குடிப்பது, அசுத்தமான வசிப்பிடம், பாதுகாப்பற்ற உணவு வகைகளை உண்பதால் மெர்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
மாமிசம், பால் இவற்றை முறையாக சமைத்து உண்ணவேண்டும் என்று அமீரகத்தின் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here