புர்கா அணிந்துவந்த வாலிபர் கைது!

பெங்களூர்: மசூதி அருகே புர்கா அணிந்துகொண்டு நின்ற மர்மநபரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். பெங்களூர் ஹெச்பிஆர் லே அவுட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.தற்போது ரம்ஜான் தொழுகை காலம் என்பதால் நோன்பு திறந்துவிட்டு மசூதியில் இருந்து பலர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது மசூதியை ஒரு சொகுசுகார் நான்கைந்து முறை சுற்றிவந்தது. அதில் இருந்து புர்கா மற்றும் கைகளில் க்ளவுஸ் அணிந்த ஒருவர் இறங்கி மசூதி வாசல் அருகே நீண்டநேரம் நின்றுகொண்டிருந்தார்.அவர் தலைமுடி அலங்காரம் வித்தியாசமாக சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, பொதுமக்கள் அவரை சந்தேகப்பட்டு பிடித்து விசாரித்தனர். அவர் ஆண் என தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர்.பிடிபட்ட நபர் சிவராஜ் என்ற காளி என்றும் கேஜிஹள்ளியை சேர்ந்த அவர் மீது பல வழக்குகள் உள்ளன என்றும் போலீசார் தெரிவித்தனர். சிவராஜிடம் போலீசார் துருவிதுருவி விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here