கேரளாவில் ஆணவக்கொலை! போலீசார் மீது நடவடிக்கை!!

கேரளா: கேரளா தலித் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர் கெபின் பி ஜோசப். கல்லூரியல் படிக்கும் போது கெவினுக்கும் நீனு என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.இளங்கலை பட்டம் இரண்டாம் ஆண்டு பயிலும் நீனு பெற்றோருக்கு தெரியாமல் கெவினை சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொண்டார். இது நீனுவின் பெற்றோருக்கு தெரிந்ததால் உறவினர்கள் 10 பேருடன் கெவினின் வீட்டிற்கு சென்றனர். கெவினை காரில் கடத்தனர். 20கி.மீ சென்றவுடன் கெவினை கீழு தள்ளி அடித்து கொன்றுள்ளனர்.
நீனுவின் சகோதரர் தலைமையில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. தகவலறிந்து நீனு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை வாங்க போலீசார்
மறுத்துள்ளனர். 30 மணி நேரம் கழித்து புகாரை பெற்ற போலீசார் கெவின் சடலத்தை மீட்டுள்ளனர்.இது குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன், டிஜிபி தலைமையில் சிறப்பு படையை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் உடனடியாக வழக்கு பதிவுசெய்யாத போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று
தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here