காலா ரிலீஸ் செய்யமாட்டோம்!! கர்நாடகா தியேட்டர் அதிபர்கள் முடிவு!!

பெங்களூர்: ரஜினிகாந்தின் காலா சினிமா கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இதுதொடர்பாக முடிவெடுத்துள்ளது.கர்நாடக திரைப்படவர்த்தகசபை நிர்வாகி சா.ரா.கோவிந்து இதுகுறித்து கூறுகையில், காலா படத்தின் விநியோக உரிமையை கோல்டி பிலிம்ஸ் வாங்கியுள்ளது. அதன் உரிமையாளர் சவுரவ் திரைப்பட வர்த்தகசபையிடம் படம் ரிலீஸ் தொடர்பாக கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக தியேட்டர் அதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் காலாவை ரிலீஸ் செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
படத்தை திரையிட்டால் திரையரங்குகளுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறிவருகின்றனர்.
காலா திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்வது என பேச்சுவார்த்தையில் ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரஜினியின் குசேலன் திரைப்படத்துக்கும் 2008ல் கர்நாடகாவில் பிரச்சனை எழுந்தது.
அப்போது ரஜினி பொதுமன்னிப்பு கேட்டதால் பிரச்சனை சுமுகமாக தீர்த்துவைக்கப்பட்டது.
தமிழகத்தில் அரசியல் கட்சி துவங்க தயாராகும் ரஜினி தற்போது வருத்தம் தெரிவிக்கும் நிலையில் இல்லை. எனவே காலாவும் கர்நாடகாவில் இல்லை என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here