செல்போன் பட்டன் தின்ற குழந்தைக்கு தீவிர சிகிச்சை!

சென்னை:செல்போன் பட்டனை தின்ற குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தவழும் வயதில் உள்ள குழந்தைகள் கையில் கிடைப்பதை தின்றுவிடும் இயல்புடையன.அக்குழந்தைகளை தீவிரமாக கண்காணிக்கவேண்டும். இல்லாவிட்டால் அவற்றின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய விஷயங்களை அவை அறியாமல் செய்துவிடும்.
சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் சுரேஷ். வீட்டில் செல்போன் சர்வீஸ் நடத்தி வருகிறார்.
இன்று காலை ஒரு போனை சரிசெய்ய கழட்டிவைத்திருந்தார். அப்போது ஒருவர் போனில் அழைத்து பேசிக்கொண்டிருந்தார்.இதற்கிடையே, அவரது 2வயது குழந்தை உத்தேஷ், செல்போன் பட்டனை எடுத்து தின்றுள்ளது.
இதனால் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here