பேருந்தில் மலர்ந்த காதல்! சிறையில் காதலன்!!

சென்னை: பெயிண்டர் ராஜபாண்டி சென்னை பம்மல் பசும்பொன் நகரை சேர்ந்தவர்.
தினமும் பம்மலில் இருந்து பல்லாவரத்துக்கு பேருந்தில் வேலைக்கு செல்வார். அப்பேருந்தில் பொழிச்சலூரை சேர்ந்த 17 வயது நர்சிங் மாணவியுடன் ராஜபாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.இருவருக்கும் இருந்த பழக்கம் வெகு விரைவில் காதலாக மாறியுள்ளது. சென்னையின் பல இடங்களில் சுற்றி திரிந்து தங்கள் காதலை வளர்த்து கொண்டனர்.காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கு தெரியவந்தது. பெற்றோர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வெறுப்படைந்து காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர்.புகாரை விசாரித்த போலீசார் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த ஜோடியை மீட்டனர். மாணவி பெற்றோருடன் செல்ல சம்மதித்தார். போலீசார் ராஜபாண்டியன், சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here