ரசிகரை தேடி செல்பிவிடியோ வெளியிட்ட நடிகர்!

பெங்களூர்: கன்னட திரையுலகில் பிரபலமான நடிகர் கிச்சா சுதீப். இவரது ரசிகர் மணிகண்டன் பெங்களூர் கிரிநகரில் வசித்துவருகிறார். 10ம் வகுப்பு மாணவரான இவரை கடந்த 20ம் தேதிமுதல் இவரை காணவில்லை.போலீசில் புகார் கொடுத்துள்ள பெற்றோர், சுதீப் ரசிகர்மன்றத்தினருக்கும் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் தெரியவந்த சுதீப் செல்பி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மணிகண்டன் எங்கிருந்தாலும் உடனே திரும்பிவா. உன் அம்மா உன்னை தேடிவருகிறார்.நீ இருக்கும் பகுதியில் உள்ள ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்தால் போதும் அவர்கள் பத்திரமாக உன்னை வீட்டுக்கு அழைத்து வருவார்கள்.உன் குடும்பத்தினரைப்போன்று நானும் ஆர்வமாக உள்ளேன். என்று தெரிவித்துள்ளார் நடிகர். இந்த விடியோ சுதீப்பின் சமூகவலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.அரசியல் பயணத்தை பல நடிகர்கள் தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் மீது அவர்கள் தனிக்கவனம் செலுத்திவருகின்றனர். நடிகர் சிம்பு ரசிகர்மறைவுக்கு போஸ்டர் ஒட்டினார். நடிகர் தனுஷ் ரசிகர் மறைவுக்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here